திணறும் வெப்சைட்.. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு… லிங்க் பண்ணிட்டிங்களா..?

பான் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் வெப்சைட் முடங்கியுள்ளது.

கடந்த வருடம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்க வேண்டும் என கூறியது.

இந்நிலையில் கடைசி நாளான இன்று பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உடன்  இணைக்கும் வருமான வரித்துறை வெப்சைட்டின் வேகம் குறைந்துள்ளது. பான் கார்டை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்காவிட்டால் அபராதமாக 1000 ரூபாய் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனால் பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை வெப்சைட்குள் சென்றதால் அந்த வெப்சைட் திணறி வருகிறது.