பெட்ரோல் – டீசல் விலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த “ரோகித் சபர்வால்” என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் – டீசல் விலை பற்றி கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த ஆர்.டி ஐ, ஒரு லிட்டர் டீசல் 34 ரூபாய் முதல் 36 ரூபாய் வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோல்
32 முதல் 34 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சொந்த நாட்டில் பெட்ரோல் – டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பாதி விலையில் ஏற்றுமதி செய்துவரும் மத்திய பாஜக அரசை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.